விஜய்யுடன் நாங்க கூட்டணி வெச்சா என்ன தப்பு? டிடிவி தினகரன் அதிரடி! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!

Prasanth K
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (09:52 IST)

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியுள்ள நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோருக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என கூறப்பட்டு வந்தது. அந்த கூற்றை உண்மையாக்கும் விதமாக முன்னதாக ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அவரைத் தொடர்ந்து தற்போது டிடிவி தினகரனும் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்

 

இதுகுறித்து பேசிய அவர் ஒருங்கிணைந்த அதிமுக என்பதுதான் தனது விருப்பமும், ஓபிஎஸ்ஸின் விருப்பமும் கூட என கூறியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமி தனக்கு எப்பவுமே அண்ணன் தான் என கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சிகளை சிறப்பாக கையாண்டதாகவும், நயினார் நாகேந்திரனிடம் அந்த திறன் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

 

தற்போது கூட்டணியிலிருந்து விலகியுள்ள அமமுக விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் “நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும். திமுகவுடனும், சீமானுடனும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கும். விஜய்யுடன் கூட்டணி வைத்தால் என்ன? அவர் தலைமை தாங்கக் கூடாதா? விஜய்யை குறைத்து பேசக்கூடாது” எனக் கூறியுள்ளார்.

 

ஏற்கனவே பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரனும் அந்த பொருள்படும்படியே பேசியுள்ளதால் தமிழக சட்டமன்ற தேர்தலில் மும்முனை கூட்டணி போட்டி நிலவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்