Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்னை அடிக்க?: சசிகலா புஷ்பா ஆவேசம்!

ஜெயலலிதாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்னை அடிக்க?: சசிகலா புஷ்பா ஆவேசம்!
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (13:23 IST)
சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.


 
 
இன்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, கட்சி தலைவரால் நான் துன்புறுத்தப்பட்டேன் எனவும், அவர் என்னை கன்னத்தில் அறைந்தார் எனவும் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும், எம்.பி. பதவி கொடுத்த கட்சி தலைவருக்கு நன்றி கூறினார். கணவர், குழந்தைகளுடன் பேச என்னை அனுமதிக்கவில்லை. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கண்ணீர் மல்க கூறியவர் பாதுகாப்பு வேண்டி கோரிக்க விடுத்துள்ளார்.
 
எம்.பி. பதவி கொடுத்தார் என்பதால் என்னை அடிக்க அவருக்கு உரிமை இல்லை என சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார்கள். எத்தகைய மிரட்டலுக்கும் பயந்து எம்.பி.பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என சசிகலா புஷ்பா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை ஏன் தாக்கினார் தெரியுமா?: உளவுத்துறை ரிப்போர்ட்