Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Siva
புதன், 11 டிசம்பர் 2024 (07:52 IST)
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த கட்டடத்தை தாழ்வாக உருவாகியுள்ள நிலையில், இது இலங்கை மற்றும் தமிழக கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக இன்று மற்றும் நாளை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை இடி மின்னலுடன் பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், திருவள்ளூர் மற்றும் சென்னையில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்

கனமழை எதிரொலி: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

எல்லை தாண்டி மீன்பிடித்த 78 மீனவர்கள் கைது.. இந்திய கடலோர காவல் படை அதிரடி..!

மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.. திருமாவளவன்

மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடந்தால் தேர்தலை புறக்கணிப்போம்: கிராம சபையில் தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments