Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட்டை திறந்தே தீருவோம்: மார்தட்டும் அதிகாரி; முட்டாளாக்கப்பட்ட மக்கள்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (16:27 IST)
ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறப்போம் என ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடத்தி அது கலவரமாக மாறி 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து வேதாந்தா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்தது. ஆனால், தமிழக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத, ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கண்டிப்பாக ஆலையை திறப்போம் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments