Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலுடன் தண்ணீர் கலப்பு: பாதியில் பழுதாகி நின்ற வாகனங்கள்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (06:56 IST)
பெட்ரோலுடன் தண்ணீர் கலப்பு: பாதியில் பழுதாகி நின்ற வாகனங்கள்!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலப்படம் கலந்த பெட்ரோலை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் செங்கல்பட்டு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலுடன் எத்தனால் மட்டுமின்றி தண்ணீரும் கலக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுவதாகவும் அதனால் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று பெட்ரோலுடன் எத்தனால் மட்டுமின்றி தண்ணீரும் கலக்கப்பட்டதா? என்ற கேள்வி அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது 
இந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்ட வாகனங்கள் திடீரென பாதி வழியில் பழுதாகி நின்றதால் பெட்ரோல் நிலைய ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் நேரில் இன்று இந்த பெட்ரோல் நிலையத்தை ஆய்வு செய்து வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments