Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல்! – சென்னையில் விநோத திருமண பரிசு!

Advertiesment
திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல்! – சென்னையில் விநோத திருமண பரிசு!
, ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:42 IST)
நாட்டில் சின்ன வெங்காயம், பெட்ரோல் உள்ளிட்டவை விலை அதிகரித்துள்ள நிலையில் திருமணத்தில் அவற்றையே பரிசாக வழங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து வந்ததை தொடர்ந்து தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றன. பெட்ரோல் லிட்டர் ரூ.100ஐ நெருங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு பரிசளித்த நண்பர்கள் பெட்ரோல், கேஸ் சிலிண்டர் மற்றும் சின்ன வெங்காயம் போன்றவற்றை பரிசாக அளித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து சின்ன வெங்காயமும் விலை உயர்ந்து கிலோ ரூ.150 வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் திருமணத்தில் அளிக்கப்பட்ட இந்த நூதன பரிசு வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை விரைந்த புதுச்சேரி அதிமுகவினர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!