Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி: டிவிட்டரில் ஒலிக்கும் மக்களின் குரல்!

Advertiesment
#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி: டிவிட்டரில் ஒலிக்கும் மக்களின் குரல்!
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (14:32 IST)
மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானதை #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி என இணையவாசிகள் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று மழையின் காரணமாக இடிந்து விழுந்ததில் அருகில் வீடுகளில் வசித்த 17 பேர் உயிரிழந்தனர். சுவற்றை கட்டியவரை கைது செய்ய வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் பொதுமக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டதில் போலீஸுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து தலைமறைவான சுற்றுச்சுவர் வீட்டின் சொந்தக்காரர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் வலை வீசி தேடி வந்தனர். தற்போது  தனது வீட்டை சுற்றி 20 அடி உயர்த்துக்கு கல்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். 
webdunia
இந்நிலையில் 17 பலியானதிற்கு வருத்தம் தெரிவித்து பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித், திண்டாமை சுவர் இடிந்து 17 பேர் பலி என தனது கருத்தை வெளிப்படுத்தினார். 
 
இதன் பின்னர் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இந்த சுவரை திண்டாமை சுவர் என்றே குறிப்பிட்டார். உண்மையில் அது தீண்டாமை சுவர்தான் என மக்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்களது ஆதகங்களை #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது தேசிய அளிவில் டிரெண்டாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ என் ரத்தக் கண்ணீருக்கும், சாவுக்கும் காரணம் ஆசிரியர்’.. கடிதம் எழுதி வைத்து மாணவன் தற்கொலை !