கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு 'பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான் என்றும், இதில் முறைகேடு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி தேனிக்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் சமயத்தில் திடீரென வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டு உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தேனி தொகுதியின் அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.