Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த விஷால்

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (22:45 IST)
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற தினகரனின் அணிக்கு அதிமுகவின் பல தலைவர்கள் வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதி செய்வதை போல் வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை நேரில் சந்தித்து ஆதர்வு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தினகரனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

அபார வெற்றி பெற்றிருக்கும் திரு தினகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியை பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.  திரு. தினகரன் அவர்கள் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற திரு. தினகரன் அவர்களுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற திரு. தினகரன் அவர்கள் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும்  தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments