Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் வெற்றி எதிரொலி: இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (22:16 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடும் பலர் தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நாளை முதல் நடக்க போவதை வேடிக்கை பாருங்கள் என்று தினகரன் கூறியதில் இருந்து இன்னும் பல எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தினகரனை நோக்கி வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments