ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் - விஷால் அதிரடி

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (16:53 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போது அவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

 
அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக ரஜினி கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்து பேசினார். 
 
மேலும், திரைத்துறையிலும் அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. அவருக்கு பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் “கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்துள்ளார். அரசியல் என்பது சமூக சேவைதான். தலைவர் இறங்கிவிட்டார். நானும் அவருக்கு ஆதரவாக அத்தனை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து அவருக்கு உதவியாக இருப்பேன்” என விஷால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..

மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்

களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments