Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பரங்குன்றத்தில் விஷால்? ஆர்.கே.நகர் மாறி ஆகாம இருந்தா சரி...

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (20:37 IST)
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் அடுத்து திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் திட்டங்களை வகுத்து வருகின்றனர். 
 
இதில் திமுக மற்றும் அதிமுக கட்டாய வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. அதோடு, தினகரனின் கட்சி, பாஜக என மற்ற கட்சிகளும் வெற்றி முனைப்பில் போட்டிடக்கூடும். எனவே இந்த இரு தேர்தலும் பன்முனை போட்டி கொண்டிருக்கும். 
 
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விஷால் பேட்டியளித்துள்ளார். விஷால் கூறியது பின்வருமாறு, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து இப்போது இந்த முடிவும் செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு யோசித்து அதன் பின்பே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே விஷால், ஆர்கே நகர் தேர்தலில்வேட்புமனு தாக்கல் செய்து அது கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படமால் ஏமார்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments