Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

மோடிக்கு பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Advertiesment
மோடிக்கு பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து
, திங்கள், 17 செப்டம்பர் 2018 (17:44 IST)
இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள்  என பலரும் தங்களது வாழ்த்துக்களைத் கூறியபடி இருக்கின்றனர்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
நாட்டை முன்னேற்ற வழித்தடத்தில் கொண்டு செல்ல தீவிரமாக பணியாற்றி வருபவர் பிரதமர்’ என்று புகழ்ந்து தன் வாழ்த்து கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
அன்பான மனிதரான பிரதமர் மோடிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல உடல் நலமும் தீர்க்க ஆயுளும் பெற்றிட வேண்டும். தேசத்துக்கு அவர் தொடர்ந்து பணிசெய்ய வேண்டும். இந்த தேசத்தை முன்னேற்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்
பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் ,மகிழ்ச்சியுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கடிதம் மூலமாக தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள முதல்வர் 'நல்ல உடல் சுகத்துடன் தேச மக்களுக்கு பணியாற்ற அந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகளைக். கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிர் போகும் நேரத்திலும் நிலானி..நிலானி : புலம்பிய காதலர்