Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடலைன்னாலும் பள்ளி மூடல்! – ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய உத்தரவை விருதுநகர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன்படி விருதுநகருக்குட்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும் அந்த பள்ளியை மொத்தமாக மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments