உள்ளதும் போச்சு.. ‘விளவங்கோடு’ இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த பாஜக.. விஜயதாரணி ஏமாற்றம்..!

Mahendran
வெள்ளி, 22 மார்ச் 2024 (15:01 IST)
‘விளவங்கோடு’ காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி அக்கட்சியில் இருந்து திடீரென விலகியதோடு பாஜகவில் இணைந்தார் என்பதும் அதன் பின்னர் ‘விளவங்கோடு’ எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தார் என்பது தெரிந்தது. 
 
இந்நிலையில் ‘விளவங்கோடு’ தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் விஜயதாரணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை வெளியான பட்டியலில் விஜய் தாரணி பெயர் இல்லை என்பது அவரது தரப்பினருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. 
 
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் இடம் கிடைக்காத நிலையில் தற்போது ‘விளவங்கோடு’ எம்எல்ஏ இடைத்தேர்தலில் வி.எஸ்.நந்தினி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் விஜயதாரணி தரப்பினார் கடும் ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அவர் எம்எல்ஏவாக இருந்த நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் எம்எல்ஏ பதவி இருந்த நிலையில் அந்த பதவியை யார் ராஜினாமா செய்து விட்டு பாராளுமன்றத்தில் எம்பி ஆகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது பெயர் மக்களவைத் தேர்தல் பட்டியலிலும் இல்லை என்பதால், உள்ளதும் போச்சு என்ற பழமொழியை ஞாபகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments