Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவை தேர்தலுடன் 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்!

Advertiesment
Assembly elections

Sinoj

, சனி, 16 மார்ச் 2024 (17:43 IST)
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா ஆகிய  4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
18 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக எப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரிய நடைபெறுவதாக தலைமை  தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா ஆகிய  4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்திலும்; மே 13 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
 
மேலும்,  வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
 
மறுசீரமைப்பு தாமத்தினாலும், பாதுகாப்பு காரணத்தாலும், தற்போது ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவில்லை என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா..! 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்.! பிரதமர் மோடி..!!