Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதாவை பார்த்து கண் கலங்கிய விஜயகாந்த்: சுடுகாட்டில் நெகிழ்ந்த மக்கள்!

அனிதாவை பார்த்து கண் கலங்கிய விஜயகாந்த்: சுடுகாட்டில் நெகிழ்ந்த மக்கள்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (09:33 IST)
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது மரணம் தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண் கலங்கியது கூடியிருந்து பொதுமக்களுக்கு நெகிழ்சியை ஏற்படுத்தியது.


 
 
மாணவி அனிதா மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனால் அவரது போராட்டத்திற்கு பலன் கிடைக்காமல் போனது. இதனால் அனிதாவின் கனவு, லட்சியமான மருத்துவராகும் வாய்ப்பு தகர்ந்து போனது.
 
இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலம் தழுவிய போராட்டங்கள் வெடித்தன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கண்ணீரை மாணவி அனிதாவுக்காக சிந்தினர். அனைவரும் இறந்து போன மாணவி அனிதாவை தங்கள் வீட்டு பிள்ளைகளாகவே பார்த்து அழுதனர்.
 
அனிதாவின் இறுதிச்சடங்கிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகை புரிந்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவி அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால் அவரது உடல் நிலையும் மோசமாக இருந்தது.
 
இருந்தாலும் உறுதியாக இருந்த விஜயகாந்த் மாணவியை கண அரியலூர் புறப்பட்டார். ஆனால் அவர் வருவதற்கு முன்னர் அனிதாவின் உடலை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து விடாப்பிடியாக விஜயகாந்த் நேரடியாக சுடுகாட்டுக்கே சென்று மாணவி அனிதாவை பார்த்தார்.
 
மாணவி அனிதாவை உற்றுப்பார்த்தபடி அவர் கண்கள் கலங்கி காணப்பட்டார். இதனை பார்த்த அங்கு கூடி பொதுமக்கள் விஜயகாந்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments