Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கயெல்லாம் பத்திரிகையாளரா த்தூ....: விளக்கம் அளிக்க விஜயகாந்துக்கு உத்தரவு

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (10:45 IST)
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பத்திரிகையாளர்களை பார்த்து நீங்கயெல்லாம் பத்திரிகையாளரா த்தூ என காறி துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய பத்திரிகை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


 
 
ரத்ததான முகாம் ஒன்றில் கலந்து கொண்ட விஜயகாந்த், பத்திரிகையாளர்களை சந்தித்தர். அப்போது கேள்வி கேட்ட பட்திரிகையாளர்களை நோக்கி த்தூ என காறி துப்பினார். மேலும் சேலத்தில் பத்திரிகையாளர்களை விஜயகாந்த் தாக்க முயற்சித்தார். இந்த விவகாரங்கள் பலத்த சர்ச்சை ஏற்படுத்தியது.
 
சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்கிலும் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. விஜயகாந்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் என சேர்ந்து கிளம்பியது. இந்நிலையில், இந்திய பத்திரிகை கவுன்சில் தாமாக முன்வந்து விஜயகாந்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 13-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சில் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
 
இதனையடுத்து விஜயகாந்த் பதிலளிக்க கால அவகாசம் தேவை என்று தே.மு.தி.க.வின் டெல்லி மாநில செயலாளரும், வழக்கறிஞருமான ஜி.எஸ். மணி இந்திய பத்திரிகை கவுன்சில் முன்பு நேற்று ஆஜராகி கேட்டுக்கொண்டார்.
 
அவரது வேண்டுகோளை ஏற்ற இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சி.கே. பிரசாத் நான்கு வாரம் கால அவகாசம் அளித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments