Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக விருப்ப மனு.. தேர்தலில் களமிறங்கும் கேப்டன் குடும்பம்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்ப மனு பெற்று வரும் வகையில் விஜயகாந்த் குடும்பத்தினர் பெயரும் விருப்ப மனுவில் இடம்பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை தேமுதிக தொடங்கியிருந்தாலும் இன்னமும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

முன்னதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘தேமுதிகவிற்கு சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள வலு இருப்பதாக பேசி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் தேமுதிகவின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேபோல விருதாசலத்தில் பிரேமலதா விஜயகாந்தும், அம்பத்தூரில் விஜய பிரபகாரனும் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments