Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் வருத்தம் ஒன்றுமில்லை: விஜயதரணி

Advertiesment
தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் வருத்தம் ஒன்றுமில்லை: விஜயதரணி

Siva

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:26 IST)
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த விஜய் தரணிக்கு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் என்னை நிச்சயமாக களத்தில் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக இருப்பதால் கண்டிப்பாக என்னை களத்தில் பயன்படுத்துவார்கள் என்றும் எனக்குரிய மரியாதை தருவார்கள் என்றும் நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த பாசம் உள்ளது என்றும் தேர்தலுக்காக மட்டுமின்றி தேர்தலுக்கு முன்பே கூட அவர் பலமுறை தமிழகத்திற்கு வந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

நான் மக்களோடு இணைந்து பல ஆண்டுகள் அரசியல் செய்து கொண்டிருப்பதால் என்னை நிச்சயம் பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன் என்று கூறினார்

எனக்கு தகுதியான பதவி மற்றும் பணிகளை கொடுத்து என்னை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது போகப்போக பார்க்கலாம் என்று விஜயதரணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!