Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு பாத பூஜை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

Advertiesment
vijay makkal iyakkam
, ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (20:19 IST)
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும் உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர்  விஜய்யின் உத்தரவின் பேரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவினர்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் எக்ஸ் தள பக்கத்தில் ‘’தளபதிஅவர்களின் சொல்லுக்கிணங்க, #மத்தியசென்னை மாவட்ட  வில்லிவாக்கம் மேற்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றை அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் வழங்கினார்!

இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் மேற்கு பகுதி தலைவர், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், மத்தியசென்னை மாவட்ட  வில்லிவாக்கம் மேற்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் மிக்ஜாம்  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது…

 தளபதி அவர்களின் உத்தரவுப்படி அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன்
புஸ்ஸி N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல்படி மிக்ஜாம் புயலால்  பாதிக்கப்பட்ட
நான்மங்கலம் பகுதியில்  வசிக்கும் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன 'என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு விஜய் மக்கள் இயக்க சென்னை புற நகர் மாவட்ட தலைவர் சரவணன் பாத பூஜை செய்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கையால் எம்.ஜி.ஆர் தொண்டர்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது- கே.சி.பழனிசாமி