Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

vinoth

, சனி, 28 டிசம்பர் 2024 (07:21 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சமீபகாலமாக இவ்வளவு பேர் கலந்துகொண்ட ஒரு இறுதி ஊர்வலத்தைத் தமிழ்நாடு காணவில்லை.

அதையடுத்து இப்போது வரை ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அங்கு தினசரி அன்னதானமும் கேப்டன் பெயரால் செய்யப்பட்டு வருகிறது. அதையடுத்து இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து அவரது நினைவிடம் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நினைவஞ்சலியை அவரது கட்சியினரும் குடும்பத்தினரும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் இறப்புக்குப் பிறகு அவரது கட்சியின் செயல்பாடு தொய்வடைந்துள்ள நிலையில் மீண்டும் தொண்டர்கள் உத்வேகம் பெற இந்நிகழ்ச்சி உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!