Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைமுதல்வர் பன்னீர் செல்வம் வீடு திரும்பினார்…

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:34 IST)
தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகளை செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

துணை முதல்வருக்கு மாஸ்டர் செக்கப் செய்யப்பட்டதாகவும், பரிசோதனை முடிவுகளை டாக்டர்கள் குழு ஆய்வு செய்ததாகவும், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வரை சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்தார். மேலும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தொலைபேசி வாயிலாக ஒ.பன்னீர் செல்வத்திடம் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலநிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments