Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் இன்று மக்களவை தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (07:00 IST)
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் தொகுதியில் அதிக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்தது
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து சற்றுமுன் வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஏசி சண்முகம் அவர்களும், திமுக அதிமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி அவர்களும் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் 
வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, ஆரணி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கிய வேலூர் மக்களவைத் தேர்தலில் சுமார் 14.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர்
 
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையடுத்து வேலூர் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர் 
 
வேலூர் தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூடுதலாக வேலூரையும் கைப்பற்றுமா? அல்லது ஒரே ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக கூடுதலாக இன்னொரு தொகுதியையும் கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments