Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேல் யாத்திரைக்கு முட்டுக்கட்டை போட்ட நிவர் புயல்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (13:15 IST)
நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது.   
 
அதாவது, நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் போது மணிக்கு 130 - 140 கிமி வேகத்தில் காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமி வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி இன்று காலை 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது நிவர் புயலின் வேகம் 11 கிமீ ஆக உயர்ந்துள்ளதாம். கடலூரில் இருந்து 240 கிமீ, புதுச்சேரில் இருந்து 250 கிமீ, சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 
 
இதனிடையே நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். மேலும், டிசம்பர் 4 ஆம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு செய்தபின் டிசம்பர் 5 ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரௌ நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் என்று எல்.முருகன் அறிவித்துள்ளார். 
 
இதேபோல திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தனது தேர்தல் பரப்புரையை நிவர் புயல் காரணம் நிறுத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments