கைலியுடன் வர தடை விதித்த விஏஓ மீது நடவடிக்கை: தஞ்சாவூரில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (12:00 IST)
விஏஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலியுடன் வரக்கூடாது என தடை விதித்த விஏஓ இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி என்ற  பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கரிகாலன். விமானப்படையில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவர் விஏஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலி, கால் சட்டை, நைட்டி அணீந்து வரக்கூடாது என்று பெயர் பலகை ஒட்டி வைத்திருந்தார். 
 
இந்த நிலையில் மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விவசாயி ஒருவர் கைலியுடன் வந்ததால் அவர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கரிகாலனை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments