Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குளித்த வைகோவின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (13:50 IST)
மீம்ஸ்களால் மனமுடைந்து தீக்குளித்த வைகோவின் உறவினரான சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில் வைகோ ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ ஆலையினரிடம் பணம் வாங்குவதற்காக தான் இந்த போராட்டத்தை நடத்துகிறார் என்று மீம்ஸ் வெளியானது. இதனால் மனமுடைந்த வைகோவின் மருமகன் சரவணன் சுரேஷ், வைகோவிடம் சென்று பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் உங்களைப் பற்றி அவதூறு பரப்பி மீம்ஸ் வெளியிடுகிறார்கள் என வேதனையோடு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றுள்ளார் வைகோ.
 
இதனையடுத்து சரவணன்  சுரேஷ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 100% சதவீதம் தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது இந்த முடிவிற்கு நாம் தமிழர் கட்சியினர் போட்ட மீம்ஸ்களை மனம் உடைந்தே என் உறவினர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டான் என வைகோ கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments