Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு உயிர் போய்விட்டது ; இனிமேலும் மீம்ஸ் போடாதீர்கள் : வைகோ வேண்டுகோள்

Advertiesment
ஒரு உயிர் போய்விட்டது ; இனிமேலும் மீம்ஸ் போடாதீர்கள் : வைகோ வேண்டுகோள்
, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:33 IST)
நாம் தமிழர் கட்சியினர் போட்ட மீம்ஸ்களை மனம் உடைந்தே என் உறவினர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 
பொதுவாக வைகோவை பற்றி சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகிறது. குறிப்பாக, அவர் பணம் வாங்கிவிட்டார், அவர் ராசியில்லாதவர் என்கிற கருத்தையே அனைத்து மீம்ஸ்களும் பிரதிபலிக்கின்றன. சமீபத்தில் அவருக்கும், சீமான் தரப்புக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது. 
 
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் வைகோ தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இதைக்கண்ட வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் மனமுடைந்து தீக்குளித்து, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு 90 சதவீத காயம் ஏற்பட்டுள்ளது. 
webdunia

 
அந்நிலையில், மருத்துவமனைக்கு சென்று வைகோ அவரை பார்த்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “என்னைப் பற்றி சீமான் தரப்பினர் போட்ட மீம்ஸ்களால் எனது குடும்பம் மிகவும் நொறுங்கிப் போயுள்ளது. சுரேஷ் உயிர் பிழைப்பது கடினமே. என் குடும்பத்தில் யாரேனும் உயிர் துறந்தார்களா எனக் கேட்டனர். இப்போது சுரேஷ் அதை செய்துவிட்டேன். இனிமேல், தவறான மீம்ஸ்களை பதிவிட்டு காயப்படுத்த வேண்டாம்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நச்சுத்தன்மையற்ற நுண்ணுயிர் கழிவு - அமைச்சருக்கு சத்யபாமா எம்பி வேண்டுகோள்