Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு மீண்டும் பாராட்டு தெரிவித்த வைகோ: திமுகவை கடுப்பேத்துகிறாரா?

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (16:42 IST)
திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என பகிரங்கமாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைகோ நேரில் சென்று பார்த்தும் மதிமுக கூட்டணியில் இருப்பதாக ஸ்டாலின் சொல்லவில்லை

இந்த நிலையில் திமுக கூடாரத்தை காலி செய்யும் முடிவில் வைகோ இருப்பதாகவும், அவர் அதிமுகவை நெருங்குவதாகவும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு அச்சாரமாக கஜா புயலுக்கு தமிழக அரசு எடுத்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும், புயலுக்கு பின் செய்து வரும் நிவாரண பணிகளையும் வைகோ பாராடினார். மேலும் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் வைகோ, மாநில அரசை குறை கூறுவதை அவ்வப்போது தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு தரப்பில் சிறப்பான வாதம் எடுத்துவைக்கப்பட்டதாக வைகோ தற்போது கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த வைகோ, திடீரென தனது நிலையை மாற்றியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கடுப்பேத்தவே வைகோ தமிழக அரசை புகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments