மேகதாது திட்டத்துக்கு தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார்: கர்நாடக அமைச்சர் உறுதி

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (16:31 IST)
மேகதாது திட்டத்துக்கு விரைவில் தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் கண்டன தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் மேகதாது திட்டம் தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், இதனால் எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டாம் என்றும் துணை முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேகதாது திட்டத்தால் கிடைக்கும் பயனை புரிந்துகொண்டு விரைவில் தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார் என்றும், அதேபோல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கையும் தமிழக அரசு திரும்பப் பெறும் என்றும் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments