Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வைகாசி விசாகம்.. முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்..!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:46 IST)
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
உலகம் முழுவதும் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். இந்த நாளில் பால்குடம் பால்காவடி ஏந்தி பக்தர்கள் செல்வார்கள் என்பதும் பல பக்தர்கள் பாதயாத்திரை சென்று தங்களது நேர்த்டி கடனை நிவர்த்தி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திர தினத்தன்று மயில் மீது ஏறி முருகன் வருவார் என்று பொருள் என்பதால் இந்த தினத்தை முருக பக்தர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 
 
இந்த நிலையில் இன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதை அடுத்து தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சென்னை வடபழனி, மதுரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments