தமிழகத்தில் வரவுள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் தனியாக நடத்தப்படுமா, அல்லது ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்து தேர்தல் நடத்தப்படுமா என்பதற்கான ஆலோசனையில் தேர்தல் ஆணையம் இருக்கிறது.
27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படும் என்றால், அது அடுத்த ஆண்டு நடைபெறும். ஆனால், ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அது சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.