மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

Siva
ஞாயிறு, 8 ஜூன் 2025 (09:56 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரைக்கு வருகை தரும் நிலையில், அவர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும், அதனால் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
முகூர்த்த தினம் என்பதால், இன்று காலை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் வருகை காரணமாக ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
அமைச்சர் அமித்ஷா வருகையால் காவல்துறையின் கட்டுப்பாட்டால் பக்தர்கள் கடும் அவதிப்படுவதாகவும், அமைச்சர் வருகையால் பக்தர்கள் இயல்பாக சாமி கும்பிட முடியவில்லை என்றும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பதும், கூடுதல் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments