Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானாக சுட்ட பெண் காவலரின் துப்பாக்கி.. சென்னை ரிசர்வ் வங்கியில் பரபரப்பு..!

Mahendran
சனி, 26 அக்டோபர் 2024 (15:56 IST)
சென்னை ரிசர்வ் வங்கியில் பெண் காவலர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு தானாக சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இன்று அதிகாலை திடீரென அலாரம் ஒலித்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர், பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டு உள்ளார். 
 
தொடர்ந்து வங்கி முழுவதும் அவர் சோதனை செய்து பார்த்ததில் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், அலாரம் எதனால் அடித்தது என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களை அவர் மீண்டும் வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி தானாகவே சுட்டது; அதில் ஒரு தோட்டா எதிரில் இருந்த சுவரின் மீது பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில், அலாரம் ஏன் அடித்தது, துப்பாக்கியில் இருந்து தோட்டா தானாகவே வெளியேறியது எப்படி என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments