திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
ஆம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார பயணத்தை நேற்று முதல் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் துவங்கினார். 100 நாட்கள் தனது பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், உலக மீனவர் தினத்தையொட்டி நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராம மக்களை சந்திக்க சென்ற போது அடிமை அரசு மீண்டும் எங்களை கைது செய்துள்ளது. கயிறுகட்டி தடுக்க முடியாதது கடல். அதைப்போல கழகத்தின் எழுச்சியையும் எடுபுடிகளால் அடக்க முடியாது. 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.