Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் பலி… சென்னையில் சோகம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:19 IST)
சென்னை சூளைமேடு பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.

சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் பகுதியை சேர்ந்தவர் பாலு என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக நீண்ட நாட்களாக பயன்படுத்தாத தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். திருவேற்காடு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40), திப்பு சுல்தான்(25) ஆகியோர் இதற்காக தொட்டியில் இறங்கிய நிலையில் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் காப்பாற்றிய உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர்களின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments