Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

அடுத்த சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி - சுற்றி வளைத்த பொதுமக்கள்

Advertiesment
Sun music VJ
, திங்கள், 5 மார்ச் 2018 (13:28 IST)
நடிகர் சூர்யாவை கிண்டலடித்து கண்டனங்களுக்கு உள்ளான பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மீண்டும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினிகளான நிவேதிதா மற்றும் இன்னொருவர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி அலுவலகத்தின் முன் நின்று போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில், அதே தொகுப்பாளினி நிவேதிதா காரை வேகமாக ஓட்டி மற்றொரு காரின் மீது மோதி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது தோழிகளுடன் காரை ஒட்டி சென்று, பாரிமுனை பகுதியில் முன்னாள் ஒரு காரின் மீது மோதியுள்ளார். 
 
மேலும், அவரை தட்டிக் கேட்ட அப்துல் ரகுமான்  மற்றும் அவரது 11 வயது மகனை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது காரை வளைத்தனர். ஆனால், காரிலிருந்து இறங்காமல் நிவேதிதா மிகவும் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு தெரிந்த உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறேன் என திமிராக பதிலளித்துள்ளார். அங்கு வந்த போலீசாரும் அவரை அங்கிருந்து அனுப்பி விட ஆர்வம் காட்ட, அவருக்கு ஆதரவாக செயல்பட்டால் சாலை மறியல் செய்வோம் என பொங்கி எழுந்தனர். மேலும், அவர் மதுபோதையில் இருப்பதாகவும், அதற்கான சோதனையை போலீசார் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
அதன் பின் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நிவேதிதா மீது அப்துல் ரகுமான் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் காதலனை கொல்ல இந்நாள் காதலனை அனுப்பிய சென்னை கல்லூரி மாணவி