Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதற்கு மேல் முடியாது ; எடப்பாடி அணிக்கு தாவும் எம்.எல்.ஏக்கள் - தினகரன் அதிர்ச்சி

இதற்கு மேல் முடியாது ; எடப்பாடி அணிக்கு தாவும் எம்.எல்.ஏக்கள் - தினகரன் அதிர்ச்சி
, ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (15:32 IST)
தங்களுடைய எம்.எல்.ஏக்கள் பதவிகளையே நீக்கி விட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களி சிலர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் பக்கம் தாவ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 19 எம்.எல்.ஏக்கள் முதலில் பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசாட்டில் தங்க வைத்தனர். அதன்பின் அங்கிருந்து சென்னை வந்த ஜக்கையன் எம்.எல்.ஏ, எடப்பாடி அணிக்கு தாவினார். எனவே, மீதமுள்ள 18 எம்.எல்.ஏக்களை, கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தினகரன் தங்க வைத்துள்ளார். 
 
செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகிய மூவர் மட்டும் அங்கு தங்கியிருக்கவில்லை. இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தன்பால் தகுதி நீக்கம் செய்தார். மேலும், அவர்களின் தொகுதிகளும் காலி என அரசு ஆணையில் அறிவிக்கப்பட்டது. 
 
இது தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவி போன கோபம் மற்றும் சோகத்தில் அவர்கள் தினகரனை சந்திக்க விரும்பியதாக தெரிகிறது. இதையடுத்து, சமீபத்தில் கர்நாடக மாநிலம் சென்ற டிடிவி தினகரன், அவர்களை நேரில் சந்தித்து பேசினார். 

webdunia

 

 
அப்போது எம்.எல்.ஏக்களுக்கு அவர் சில வாக்குறுதிகளை கொடுத்ததாக தெரிகிறது. மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும். எனவே, ஆக்டோபர் 4ம் தேதி வரை பொறுத்திருங்கள் எனக் கேட்டுக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார் தினகரன்.
 
ஆனால், அவரின் வாக்குறுதியை பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால், அடுத்து உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். ஆனால், அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், இந்த ஆட்சியே முடிந்துவிடும் என பலரும் கவலை தெரிவித்தனராம்.
 
மேலும், அவர்கள் தங்கள் அணி பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும் இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கிறது. இது தொடர்பாக பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. பதவி நீக்கம், தொகுதி காலி அறிவிப்பு, அரசு இணையத்தில் எம்.எல்.ஏக்கள் பெயரை நீக்கியது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என கதிகலங்கியுள்ள எம்.எல்.ஏக்களில் குறைந்த பட்சம் 10 பேராவது எடப்பாடி அணி பக்கம் தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராக் ஸ்டாரான மோப்ப நாய்