Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து முன்னிலை ; ஆர்.கே.நகரில் உறுதியான தினகரனின் வெற்றி

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (16:23 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரனின் வெற்றி உறுதியானது.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.  
 
தற்போது வரை 15 சுற்றுக்கள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் சுற்று முதல் தினகரனே  முன்னிலையில் இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி, டிடிவி தினகரன் 72,413 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரான மதுசூதனன் 38,966 வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் மதுசூதனனோ 20,388 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 
 
இதில் முக்கியமாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட தினகரன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார். 
 
ஆர்.கே.நகரில் பதிவான 1,76,885 வாக்குகளில் 1,35,196 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தினகரனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு தினகரன் நேரில் வருவார் எனத் தெரிகிறது. முழு அறிவிப்பு வெளியானதும் வெற்றி சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து அவர் பெற்று செல்வார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரொம்ப நாள் ஆசை.. தன்னை இந்திய கிரிக்கெட் வீரராக மாற்றிக் கொண்ட சாட்ஜிபிடி ஓனர்!

நாங்களும் வரி கட்டணுமா? ட்ரம்ப் உத்தரவால் அதிர்ச்சியில் பென்குவின்கள்!?

திருச்சி சிவா இந்தியிலேயே பாடுவார்.. பேசத் தெரியாது மேடம்..! - நிர்மலா சீதாராமன் பேச்சால் கலகலப்பு!

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு.. சொந்த கட்சியினரே நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு..!

டிரம்ப் விதித்த 26% வரி.. எந்தெந்த இந்திய பொருட்களுக்கு பாதிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments