Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமின்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (11:46 IST)
பிரபல யூடியூபர் TTF வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை - பெங்களூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த TTF வாசன் சாகசம் செய்ய முயன்றதை அடுத்து விபத்துக்குள்ளானார். இதனை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
மேலும் கடந்த சில நாட்களாக அவர் பலமுறை ஜாமீனுக்கு முயன்ற நிலையில் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம். 3 வாரங்களுக்கு தினமும் அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்  நீதிபதி சிவி கார்த்திகேயன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments