Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சியில் ரெளடி படுகொலை.. தலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு..!

Advertiesment
திருச்சியில் ரெளடி படுகொலை.. தலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு..!

Mahendran

, சனி, 14 செப்டம்பர் 2024 (09:58 IST)
திருச்சியில் தலை துண்டிக்கப்பட்டு ரெளடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சீனிவாசன் மகன் சுந்தர்ராஜன் என்ற 33 வயது நபர் காவல் நிலையத்தில் ரெளடி பட்டியலில் இருப்பவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ரெளடி சுந்தரராஜன் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

முதல் கட்ட விசாரணையில் முந்தைய நாள் இரவு மணி வீட்டில் மொட்டை மாடியில் சுந்தர்ராஜன் சிலருடன் மது அருந்தியதாகவும் அப்போது தகராறு ஏற்பட்டதாகவும் தொழில் போட்டியின் காரணமாக ஏற்பட்ட அந்த தகராறின் போது சுந்தர்ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவருடன் மது அருந்தியவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ திட்டத்திற்கு ரூ.21,560 கோடி நிதி.. தமிழக அரசு செலவு செய்தது ரூ.5880 கோடி: வானதி சீனிவாசன்