Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம்.. தந்தை-மகள்கள் பரிதாப பலி..!

Advertiesment
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம்.. தந்தை-மகள்கள் பரிதாப பலி..!
, திங்கள், 20 நவம்பர் 2023 (08:17 IST)
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியான தந்தை மகள்கள் குறித்த சோக நிகழ்வு திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.

திருவள்ளூர் அருகே பெருமாள் பட்டியை சேர்ந்த மனோகர் என்பவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க   தனது இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார்.

அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை அவர்கள் மூவரும் கடக்க முயன்ற போது திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில்  சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 இந்த நிலையில் உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தையும் ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருபக்கமும் ரயில் வருகிறதா என்பதை பார்த்து கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றியோ தோல்வியோ, உங்களை நாங்கள் நேசிக்கிறோம்: ராகுல் காந்தி