Webdunia - Bharat's app for daily news and videos

Install App

144 போட்டும் டிராஃபிக் ஜாம்: திருந்தாத சென்னை!!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (11:10 IST)
ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்த 124 ஆக உள்ளது. 
 
இதனால் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த தடை நீடிக்கப்படுமா என்படை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். 
 
இந்நிலையில், ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மேம்பாலத்தின் 3 புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் கொரோனா விழிப்புணர்வு இன்னும் சென்னை மக்களுக்கு தெரியவில்லையா என்ற ஆதங்கம் எழுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments