நாங்கதான் டெல்லி மாநாட்டிற்கு போனோம்! – திருச்சி மருத்துமனையில் குவிந்த மக்கள்!

புதன், 1 ஏப்ரல் 2020 (10:30 IST)
டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டத்திற்கு சென்றவர்கள் தாமாக முன்வர அரசு கேட்டுக்கொண்ட நிலையில் பலர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மசூதி ஒன்றில் கடந்த 13ம் தேதி நடந்த மதகுருமார்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மதகுருக்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்துக்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கூட்டத்தில் சிலர் கலந்து கொண்ட நிலையில், இதில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மத கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்தும் பலர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தாங்களாக முன்வர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் யார் யார் டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை கண்டுபிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அரசின் வேண்டுகோளை ஏற்று பலர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் டெல்லி கூட்டத்திற்கு சென்றதாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பணத்தை வீதிகளில் வீசினார்களா இத்தாலிய மக்கள்? #FactCheck