மழை நீரை வெளியேற்றும் பணி: தி.நகரில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:04 IST)
தி.நகர் சாலைகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் காலை சிறிது நேரம் பெய்த மழைக்கு தி.நகர் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இருப்பினும் பணிக்கு செல்லுபவர்கள் வடியாத தண்ணீரில் நடந்து வேலைக்கு செல்கின்றனர். அங்கு பசுல்லா சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணி நடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments