Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மாராத்தான் போட்டியையொட்டி போக்குவரத்து மாற்றம்!

Sinoj
வியாழன், 4 ஜனவரி 2024 (20:48 IST)
சென்னையில் வரும் 6ஆம் தேதி மராத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில்,

''சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கிமீ, 32.186 கிமீ,
21.097 கிமீ மற்றும் 10 கிமீ) "FRESH WORKS CHENNAI MARATHON" ஓட்டம்நடைபெறுவதை முன்னிட்டு 06.01.2023 சனிக்கிழமை காலை 04.00 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை மாரத்தான் காமராஜர் சாலை, சாந்தோம் ஹை டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார்படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக சென்றடையும்.
 
இந்நிகழ்ச்சி தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம்
செய்யப்படுகிறது. 

அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹைரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம். 

போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

மேலும் வாகனங்கள் கொடி மரச்சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு - வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். 

ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு. லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
 
மத்திய கைலாஷ்லிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது, அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். 

காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். 

பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும். MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும்.
 
பெசன்ட் அவென்யூ. ML பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments