Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:30 IST)
தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு தடைகளாக நீக்கப்பட்டு வருகின்றன என்பதும் தற்போது பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்த நிலையில் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை என்ற பகுதியில் தமிழ்நாடு சார்பில் ட்ரைலத்தான் போட்டிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போட்டிகள் முடிந்த பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments