Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இயல்பை விட வெப்பம் அதிகமாகும்.. வாக்குப்பதிவு மந்தமாகுமா?

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:20 IST)
நாளை தமிழகம் முழுவதும் 3 அல்லது 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து நாளை தேர்தல் நாள் என்பதால் வெயில் காரணமாக வாக்குப்பதிவு மந்த நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் சென்னை உள்பட தமிழக முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவாக கூடும் என்றும் அதனை அடுத்து மூன்று தினங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை வாக்குப்பதிவு தினத்தில் வெப்பநிலை அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து வாக்குப்பதிவு மந்தமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments