Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''தமிழ்நாட்டில் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை ''- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (16:57 IST)
தமிழத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், '' 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று , சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகத் தகவல் வெளியானது.

சமையலுக்கு தக்காளி முக்கியமானது என்பதால்  ஏழை எளிய மற்றும் நடுத்தர இந்த விலையேற்றத்தைக் கண்டு சிரமத்தில் உள்ளனர். உடனடியாக அரசு தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ‘’தமிழ்நாடு முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் எனவும்,  நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில்  காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் ‘’என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments