Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உலக பிசியோதெரபி தினம்.. சசிகலா வாழ்த்து..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:20 IST)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் எட்டாம் தேதி உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு சசிகலா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னலமற்று சேவையாற்றுகின்ற பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க உதவும் வகையிலும், நாள்பட்ட வலி நிவாரணிகளை வழங்குவதிலும் பிசியோதெரபிஸ்டுகள் ஆற்றுகின்ற முக்கிய பங்கீனை அங்கீகரிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிக்கப்படுவதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
 
வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மூலம் பல்வேறு உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments